Friday, March 29, 2013

புகை (சிகரெட்) பிடிப்பதால் வரும் செக்ஸ் பிரச்சனைகள் ! -1



      கேள்வி: டாக்டர், நான் ஆறு வருடங்களாக தினமும் ஒன்றரை பாக்கெட் சிகரெட் குடிக்கிறேன். எனக்கு திருமணம் ஆகி விட்டது. என்னுடைய (சிகரெட் பிடிக்காத) நண்பர்கள் புகைப்பிடித்தால் விந்து கு
றைந்து விடும் என்று பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா?

பதில்: ஆண்களின் விந்துக்கும் சிகரெட் பிடிப்பதற்கும் தொடர்பு இல்லை என்று வெகு காலமாக நம்பப் பட்டு வந்தது. 1994 வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகள் இதனைப் பொய்யாக்கின. உலகத்தில் இருபது நாடுகளில் நடந்த ஆராய்ச்சி இது. ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா?
புகைப் பிக்கும் ஆண்களுக்கு 13% – 17% விந்து அளவு (Sperm count) சிகரெட் பிடிக்காதவர்களை விட குறைவாக உள்ளது என்பதுதான்.


கேள்வி: வணக்கம் டாக்டர், எனக்கு முப்பத்தி நாலு வயதாகிறது. நான் பதினாலு வயசிலிருந்து சிகரெட் பிடிக்கிறேன். என் மனைவியும் நானும் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்கிறோம். ஆனால் கரு உருவாக மாட்டேன்கிறது. என் மனைவியின் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை. என் விந்து அளவும் சரியாகவே உள்ளது. என் மனைவி நான் புகைப்பிடிப்பதால் தான் கருப்பிடிக்க மாட்டேன்கிறது என்கிறாள். இது உண்மையா?

பதில்: உங்கள் மனைவி சொல்வதில் ஒரு மறைந்த உண்மை இருக்கிறது, அதாவது உங்கள் விந்து அளவு சரியாக இருந்தாலும், விந்து நகரும் வேகம் (motility of Sperms) என்பது கர்ப்பம் தரிக்க மிகவும் முக்கியமானது. புகைப்பிடிப்பதால் விந்துவின் வேகம் வலுவிழக்கும், இதனாலும் உங்கள் மனைவி கருப்பிடிக்காமல் போகலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...