Wednesday, April 3, 2013

பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் நரம்பியல் மாத்திரை: எச்சரிக்கை ரிப்போர்ட்


நரம்பியல் கோளாறுகளுக்காக உட்கொள்ளப்படும் கபாபென்டின் மாத்திரைகள் மனிதர்களின் பாலியல் உணர்வுகளை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த மாத்திரைகளின் அளவு கூடுவதற்கு ஏற்ப தூக்கம்
பாதிக்கும்,தலைவலி, சோர்வு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று கூறும் ஆய்வாளர்கள் இந்த மாத்திரை தற்கொலை எண்ணத்தை தூண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது தொடர்பாக அமெரிக்கா பாஸ்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறை உதவிப் பேராசிரியர். மைக்கேல் டி. பெர்லோப் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வில் கபாபென்டினால் `அனார்கேஸ்மியா’ (உறவின்போது உச்சமகிழ்ச்சியை அடைய முடியாத நிலை), வயது முதிர்ந்தவர்களிடம் பரவலாகக் காணப்படலாம்” என்று தெரியவந்துள்ளது.

நரம்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக விரும்பப்படும் மாத்திரையாக `கபாபென்டின்’ உள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கபாபென்டின் எடுத்துக்கொள்ளும் 50 வயதைத் தாண்டியவர்களில் 11 பேரில் மூவர், `அனார்கேஸ்மியா’ நிலைக்கு உள்ளாவது தெரியவந்திருக்கிறது. ஆனால் அதேநேரம், இந்த மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்ட 1993-ம் ஆண்டில் இருந்து, சராசரியாக 38 வயதுள்ளவர்களில் 10 பேர்தான் `அனார்கேஸ்மியா’ பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

எந்த அளவு கபாபென்டின் எடுத்துக்கொள்ளப்படுகிறதோ, அதற்கு ஏற்ப அனார்கேஸ்மியா பாதிப்பு ஏற்படுகிறது. கபாபென்டின் அளவு குறைக்கப்படும்போது, அல்லது நிறுத்தப்படும்போது சம்பந்தப்பட்டவர்களால் மீண்டும் உச்ச மகிழ்ச்சியை அனுபவிக்க முடிகிறது என்று நம்பிக்கை ஊட்டுகிறார், பேராசிரியர் பெர்லோப்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...